Categories
மாநில செய்திகள்

“இரக்கமே இல்லாமல் கொட்டுது”… தனது ட்விட்டர் பக்கத்தில்… வெதர்மேன் ரிப்போர்ட்..!!

தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்த வண்ணமே இருந்து வருகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும் தற்போது வரை மழை பெய்து வருகின்றது. டிசம்பர் மாதம் ஓரளவு மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த ஐந்தாம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது.

சென்னையில் மழை குறைந்த நிலையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழை அதிக அளவிலேயே காணப்பட்டது குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பருவமழை பிப்ரவரி மாதம் வரை தொடரும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்: “ஒரு போதும் முடிவடையாத பருவமழை அல்லது தமிழ்நாட்டிற்கான குளிர்காலம் இல்லை. ஜனவரி 17 க்கு பிறகு வறண்ட காற்று காரணமாக மழை குறையுமானால், மீண்டும் மாத இறுதி முதல் பிப்ரவரி வரை மழை பெய்யும். இந்த மாதத்தில் நாம் மழையை பார்ப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. கடலூரில் 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மில்லி மீட்டர் மழை இரக்கமே இல்லாமல் பெய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |