நெல்லை மாநகராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதனால் இரண்டு அணைகளுக்கும் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து மக்களை வெளியேற்ற பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சியில் நாளை முதல் 16ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றின் உள்புறத்தில் உள்ள நீரேற்றும் கிணறுகள் மூழ்கியுள்ளன. அதனால் மூன்று நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.