பிரபல நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகை ராய் லட்சுமி ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி ,கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சின்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளது , அதனால் இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து விடுவார் எனவும் கூறப்படுகிறது . நேற்று நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘காலம் மாறிவிட்டது நாம் அனைவரும் பாசிட்டிவ் முடிவுகளுக்கு பதிலாக நெகட்டிவ் முடிவுகளை எதிர்பார்க்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கொரோனா பரிசோதனை முடிவுக்கு அவர் காத்திருப்பது போல் தெரிகிறது.