சரியாக வேகவைக்கப்படாத முட்டைகள், கோழி இறைச்சிகளை வழங்க தடை விதித்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா, பறவை காய்ச்சல் என்று வரிசை கட்டி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியதோடு, அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து பறவை காய்ச்சல் எதிரொலியாக மக்கள் யாரும் சரியாக வேக வைக்காத முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட வேண்டாம் என்று அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் ஆப்பாயில் முட்டைக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதையடுத்து சரியாக வேகவைக்கப்படாத முட்டைகள், கோழி இறைச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடாது என்று உணவகங்களுக்கு டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.