Categories
லைப் ஸ்டைல்

காபி பிரியர்களின் கவனத்திற்கு…. கேன்சர் ஆபத்து குறைவு…!!

காபி குடிப்பதால் புரோஸ்டேட் கேன்சர் அபாயத்தை குறைக்கலாம் என்று சீன மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

காபி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காபி குடிப்பது தான் ஒரு சிலரின் வழக்கமாக இருக்கிறது. காபி குடிக்கவில்லை என்றால் சுறுசுறுப்பாக இல்லாததைப் போல ஒரு உணர்வு ஏற்படும். இந்நிலையில் புரோஸ்டேட் கேன்சர் என்பது உலகில் இரண்டாவது பொதுவான பிரச்சினையாகும்.

இந்த காபியை குடிப்பதனால் புரோஸ்டேட் கேன்சருக்கான அபாயத்தைக் குறைக்கலாம் என்று சீன மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் அதிக காபி குடிப்பவர்களுக்கு புரோஸ்டேட் கேன்சரின் அபாயம் 9 சதவீதம் குறைந்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |