கடந்த ஆண்டை விட இந்த வருடம் சென்னையில் காற்று மாசு குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போகிப்பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க அரசு தடை விதித்தது. இந்நிலையில் போகி பண்டிகையான இன்று சென்னையில் 2.6 டன் பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் கும்மிடிப்பூண்டியில் உள்ள டயர் மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்படுகிறது. ஜனவரி 12 காலை 8 மணி முதல் 13 ஆம் தேதி 8 மணி வரை காற்றின் தரம் 80 மைக்ரோகிராம் /கனமீட்டருக்குள் இருந்தது.
காற்றின் தர குறியீடு குறைந்தபட்சமாக ராயபுரத்தில் 113, அதிகபட்சமாக அம்பத்தூரில் 241 ஆக பதிவாகி இருந்தது. இது கடந்த ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.