பெற்றோர்களின் அனுமதி பெற்ற மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அழைக்க வேண்டுமென டெல்லி அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெற்றோர்களின் கருத்துக் கேட்புக் பிறகு ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் ஜனவரி 18ஆம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பெற்றோரின் அனுமதி பெற்ற மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அழைக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.