Categories
தேசிய செய்திகள்

இன்னும் 12 நாள் தான்…. விவசாயிகளின் டிராக்டர் பேரணி… கலங்கி நிற்கும் மத்திய அரசு….!!

ஜனவரி 26 ல் நடக்கவுள்ள ட்ராக்டர் பேரணியை நினைத்து மத்திய அரசு தடுமாறுக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் ட்ராக்டர் பேரணியை நினைத்து மத்திய அரசு தடுமாறியுள்ளது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது “விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத மத்திய அரசு தற்போது ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகள் நடத்த உள்ள டிராக்டர் பேரணியை நினைத்து கலங்கியுள்ளது” என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விவசாயிகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே ஜனவரி மாதம் 7 ஆம் தேதியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடத்தியுள்ளனர். இந்த பேரணியை விவசாயிகள் நாடே திரும்பிப் பார்க்கும்படி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதே உற்சாகத்துடன் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதியிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |