Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… காதல் தொல்லை கொடுத்த பேராசிரியர்… கைது செய்த காவல்துறை…!!

கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு வாட்ஸ் அப்பில் காதல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அய்யப்பன்தாங்கல் என்ற பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்து கொண்டிருக்கும் மாணவிக்கு சதீஷ்குமார் வாட்ஸ் அப் மூலம் காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சதீஷ்குமார் தனக்கும் அந்த மாணவிக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக கூறி பொய்யான திருமண பதிவு சான்றிதழ் தயாரித்து அதனை வாட்ஸ் அப்பில் பரப்பி உள்ளார்.

இதனால் மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததற்காக அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவிக்கு காதலிப்பதாக தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காகவும், போலியான சான்றிதழை வாட்ஸ் அப்பில் பரப்பிய குற்றத்திற்காகவும் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதோடு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்த சதீஷ்குமார் அவரை வேறு யாரும் திருமணம் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் போலியான சான்றிதழை தயார் செய்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |