Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வில்லி ரோலில் சமந்தா… ‘தி ஃபேமிலி மேன்- 2’ வெப் சீரிஸ்… டீசர் ரிலீஸ்…!!!

நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . இதனிடையே நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன்-2 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்தியாவிலேயே புகழ் பெற்ற ஃபேமிலி மேன் வெப் தொடர் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அமேசான் பிரைமில் வெளியான இந்த தொடர் மிக பிரபலமடைந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது . இந்த தொடரை இயக்குனர்கள் ராஜ் & டி கே இயக்கியுள்ளனர். கதாநாயகனாக மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள இந்த வெப் சீரிஸில் நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .

மேலும் இந்த படத்தில் தேவதர்ஷினி ,சரிப் ஹஸ்மி ,பிரியாமணி , அழகம்பெருமாள், மைம் கோபி ,நிராஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இதுகுறித்து சமீபத்தில் நடிகை சமந்தா ‘என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது வேறு மாதிரி இருக்கும் . இந்த தொடரில் பல சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன்’ என கூறியிருந்தார். இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது . இதையடுத்து இந்த தொடரின் ட்ரைலர் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தி ஃபேமிலி மேன்-2 வெப் சீரிஸ் அமேசான்  ப்ரைமில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |