தந்தை மகனிடம் வாக்குவாதம் செய்து அவர்களைத் தாக்கி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த கிராமத்தில் உள்ள ஒரு சாலையோரம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர், தந்தை மகன் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும், அந்த 3 பேர் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து வெங்கடேசன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வரும் அமர்கவி என்பவரையும், அஜித் என்பவரையும், அதோடு 18 வயதுடைய சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.