Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் களையிழந்த பொங்கல் விழா… விவசாயிகள் வேதனை…!!!

தமிழகத்தில் தொடர் மழையால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் பொங்கல் விழா களை இழந்து காணப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டிலும் டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் தொடர்மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வயலிலேயே சாய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் கடும் வேதனையில் தவித்து வருவதால் பொங்கல் விழா களையிழந்து காணப்படுகிறது.

Categories

Tech |