விருதுநகரில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகரில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் நேற்று முன்தினம் வரை விருதுநகரில் மூன்று லட்சத்து 74 ஆயிரத்து 746 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16 ஆயிரத்து 476 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 16 ஆயிரத்து 157 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2758 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
79 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படாத நிலையில் நேற்று மேலும் 6 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் விருதுநகரில் 2,700 மேற்பட்டோரின் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை தொடர்கிறது. இதனால் நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது தெரிகிறது. இதனால் பரிசோதனை முடிவுகளை விரைவாக அறிவிக்க கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.