மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர் . நேற்று பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியான மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் குவிந்தனர்.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதித்துள்ள போதிலும் இந்த படத்தை விழா போன்று கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடினர் . இந்தப் படத்தை பார்த்த பலரும் மாஸ்டர் படம் சிறப்பான பொங்கல் விருந்தாக அமைந்ததாக தெரிவித்தனர் . இந்நிலையில் சென்னையில் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல் நாளிலேயே ரூ.1.21 கோடி வசூல் வேட்டை செய்ததாக கூறப்படுகிறது.