மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவியின் சிரமத்தை போக்க கணவர் வீட்டிலேயே கிணறு வெட்டி அசத்தியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் தண்ணீர் சேகரிக்கும் ஒரு பெண்ணின் அவல நிலையைப் போக்குவதற்கு அவரின் கணவர் வீட்டிற்குள் 15 நாட்களில் சொந்தமாக கிணறு தோண்டி அசத்தியுள்ளார். அவரின் மனைவி வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் நடந்து சென்று ஆழ்துளை கிணற்றில் இருந்து அடிகுழாய் பம்பு மூலமாக மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் எடுத்து வருகிறார். அவர்களின் குடும்பத்தில் நான்கு பேர் இருப்பதால் தினசரி தண்ணீர் சேகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஒருநாள் திடீரென அந்த அடி குழாய்க்கிணறு பழுதாகி விட்டதால் தண்ணீர் சிரமும் ஏற்பட்டது. அதனால் மனைவியின் சிரமத்தை போக்குவதற்கு போதாத நிதிவசதி இல்லாததால், தானாகவே தினமும் வீட்டில் கிணறு தோண்ட ஆரம்பித்தார். தனது கடின உழைப்பால் 15 நாட்களில் கிணறை வெற்றிகரமாக வெட்டி முடித்தார். அதில் தண்ணீர் ஊற்றெடுத்து குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.