Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் மீது கற்பழிப்பு புகார்…. காவல் நிலையத்தை நாடிய பெண்…. அதிர்ந்து போன மக்கள் ….!!

மராட்டிய சமூக நீதித்துறை மந்திரி மீது பாடகி ஒருவர் அளித்த கற்பழிப்பு புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சமூகநீதித் துறை மந்திரியாக பதவி வகிப்பவர் தனஞ்செய் முண்டே. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் பாடகியான 37 வயது பெண்ணொருவர் தனஞ்செய் மேல் காவல் அதிகாரியிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், மந்திரி தனஞ்செய் முண்டே கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தன்னை பலமுறை கற்பழித்துள்ளார் எனவும், இது தொடர்பாக ஓசிவா காவல் நிலையத்தில் தான் ஏற்கனவே புகார் அளித்தும் அதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மந்திரி மீது பாடகி அளித்த கற்பழிப்பு புகார் மராட்டிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கம் அளிக்க ஒரு அறிக்கையை மந்திரி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு எதிரான சதியாக இந்த கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த பெண்ணின் சகோதரியுடன் எனக்கு தொடர்பு உள்ளது. இந்த உறவு காரணமாக அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. எனது மனைவி குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இது தெரியும். அந்த இரண்டு குழந்தைகளையும் என் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் என் மீது இந்த கற்பழிப்பு புகார் வேண்டுமென்று சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்த பாடகியும் எனக்கு தொடர்புடைய அந்த பெண்ணும் என்னை மிரட்டி வருகிறார்கள். இது தொடர்பாக காவல் நிலையத்தில் நான் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். என் மீது இப்படிப்பட்ட அவதூறு பரப்புவதை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என மும்பை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன் என அவர் கூறினார்.

Categories

Tech |