பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி அனுப்பப்படும். அந்த குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளும் போட்டியாளர் போட்டியில் இருந்து விலகி வெளியேறிவிட வேண்டும் . அந்த வாய்ப்பு இந்த சீசன் போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் ‘பொன்மகள் வந்தாள்’ பாட்டுடன் பணப்பெட்டி வருகிறது .
#Day102 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/V8pxiEmhUG
— Vijay Television (@vijaytelevision) January 14, 2021
பிக்பாஸ் அனுப்பிய லெட்டரை வாசித்த அர்ச்சனா ‘ஒவ்வொரு பஸருக்கும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை எடுக்காவிட்டால் அடுத்த பஸருக்கான தொகை அனுப்பப்படும். இந்த தொகையை உங்களில் யாராவது ஒருவர் எடுக்க முடிவு செய்தால் நீங்கள் அதை எடுத்துக்கொண்டு இந்த வீட்டில் இருந்து வெளியேறலாம்’ என்று கூறுகிறார். இதன் கடைசி தொகையான 5 லட்சம் பணத்துடன் வெளியேறப் போவது யார் ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .