மதுரை மக்களுடன் ஒன்றாக அமர்ந்து ராகுல் மதிய உணவு சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தார் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த ராகுலை வரவேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை ரசித்து விட்டு மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல் பங்கேற்றார். அதுமட்டுமன்றி விழா முடிந்த பின்னர் அவர் பொது மக்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இது உடன் இருந்த மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.