ராஜஸ்தான் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மீதம் உள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரோப்வாய் கிராமத்தில் வசித்து வந்த பொதுமக்கள் பலர் விஷ சாராயத்தை குடித்துள்ளனர். இதனால் விஷ சாராயம் குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாரக்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் மத்திய பிரதேசத்தில் 16 பேர் விஷ சாராயம் குடித்துவிட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் இவர்களுக்கு விஷ சாராயம் யார் கொடுத்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.