நடிகை நயன்தாரா பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் தயாராகியுள்ளது . மேலும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . இன்று பொங்கல் திருநாள் என்பதால் திரையுலக பிரபலங்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர் .
https://twitter.com/NayantharaU/status/1349577676474916864
அந்த வகையில் நடிகை நயன்தாரா பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் நடிகை நயன்தாரா பட்டுப் புடவையில் நகைகள் அணிந்து பொங்கல் பானையை கையில் பிடித்தவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.