இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை நூலிழையில் விபத்தில் இருந்து கைப்பற்றியுள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
பெண்ணொருவர் சாலையை கடப்பதற்காக ஓரமாக நின்று கொண்டிருக்கிறார். அவருடைய பக்கத்தில் ஒரு இளைஞரும் நின்று கொண்டிருக்கிறார். அப்போது சாலையில் எதிர்ப்புறமாக சிறுமி ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் மறு பக்கம் நின்று கொண்டிருந்த சிறுமி வாகனம் வருவதை கவனிக்காமல் வேகமாக சாலையில் ஓடி வருகிறார். இதையடுத்து அங்கிருந்து கார் ஒன்று வேகமாக வருவதை கவனிக்காத சிறுமி ஓடி வருவதை பார்த்த அந்தப் பெண் தன்னுடைய பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞரின் கையை தட்டி அந்த குழந்தையை காப்பாற்றுமாறு எச்சரித்துள்ளார்.
உடனே அந்த இளைஞரும் அதை புரிந்து கொண்டு வேகமாக ஓடி சென்று சிறுமியை தூக்கிக்கொண்டு சாலையின் மறுபுறம் திரும்புகிறார். அப்போது அங்கிருந்து வந்த கார் வேகமாக வந்து அவர்கள் மீது மோதாமல் நிற்கிறது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையவாசிகளை கண்ணிமைக்காமல் காணவைத்து வைரலாகியுள்ளது. துரிதமாக செயல்பட்டு விபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த பெண் மற்றும் அந்த இளைஞருக்கும் பலரும் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
Hero ❤️ https://t.co/ocgH905i17
— Prince of Hastinapur (@duryodan_) December 16, 2020