Categories
சினிமா தமிழ் சினிமா

அமீரின் ‘நாற்காலி’… படத்தின் பாடலை வெளியிடுகிறார் முதலமைச்சர்…!!!

இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாற்காலி’ படத்தின் பாடலை முதலமைச்சர் வெளியிடுகிறார் .

தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீர் யோகி , வடச்சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார் . அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாற்காலி. இந்த படம் மிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை  வி இஸட் துரை இயக்கியுள்ளார். இந்த படத்தை மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆதம்பாவா தயாரித்துள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக 555 பட நாயகி சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார் .மேலும் மாரிமுத்து , சரவண சக்தி, அர்ஜுனன் ,கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், சுப்ரமணியசிவா, ராஜ்கபூர் ,ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

இயக்குனர் அமீருக்கு கைகொடுக்கும் முதலமைச்சர் || Tamil Cinema tn cm will  release Ameer movie song

நாற்காலி படத்திற்காக மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடைசியாக ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ என்ற பாடலை பாடியிருக்கிறார் . இந்நிலையில் இந்த பாடலை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 16ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் திரு .எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் வெளியிட அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

 

Categories

Tech |