Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிரடியான சுவையில்… இந்த ருசியான ரெசிபிய செய்து அசத்துங்க..!!

புட்டரிசி சர்க்கரைப் பொங்கல் செய்ய தேவையான பொருள்கள்:

புட்டரிசி                        – 1 கப்
பாசிப் பருப்பு               – அரை கப்
வெல்லம்                     – 2 கப்
ஏலக்காய்ப் பொடி    – அரை டீஸ்பூன்
ஜாதிக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
பச்சைக்கற்பூரம்       – ஒரு சிட்டிகை
முந்திரி, பாதாம்       – 5
உலர் திராட்சை        – சிறிதளவு
நெய்                               – அரை கப்

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் பாசிப் பருப்பை போட்டு, நன்கு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி, வெண்ணீராக கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும்.

பின்பு கொதிக்க வைத்த தண்ணீரில், புட்டரிசியை போட்டு, சில மணி நேரம் நன்கு ஊற வைத்ததும், அதை  மிக்ஸிஜாரில் அரித்து போட்டு  பரபரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து, அதில் அரைத்த புட்டரிசி, வறுத்த பாசிப் பருப்பை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 4 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.

மேலும் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் வெல்லத்தைபோட்டு, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சியதும், அதில் வேக வைத்த புட்டரிசி, பருப்புக் கலவையை போட்டு, வேகும் வரை நன்கு கிளறவும்.

பிறகு, அதில் ஏலக்காய் தூள், ஜாதிக்காய் பொடி, பச்சைக் கற்பூரம், முந்திரி, பாதாம், திராட்சையை சேர்த்து நன்கு கொதித்து கெட்டியாக வந்ததும், கடைசியாக சிறிது நெய் ஊற்றி கிளறிவிட்டபின்  இறக்கி பரிமாறினால், ருசியான புட்டரிசி சர்க்கரைப் பொங்கல் ரெடி.

Categories

Tech |