ஜெயலலிதாவை போல் ஒரு தலைமை தற்பொழுது அதிமுகவில் இல்லை என்று எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிமுக மிகவும் பின்தங்கிய சரிவை சந்தித்து உள்ளது. இதற்கான காரணத்தை அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் அவர் பேசியதாவது,
அதிமுக பின்னடைவை சந்தித்ததற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் , ஜெயலலிதாவை போல் ஒரு தலைமை தற்பொழுது கட்சியில் இல்லை ஆகையால் அதிமுகவிற்கு தலைமை பண்பு கொண்ட ஒற்றை தலைமை தேவைப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இரட்டை தலைமையால் சின்ன சின்ன நெருடல்கள் அவ்வப்போது அதிமுகவில் ஏற்பட்டு வருகிறது இதனால் ஒரு விரிசல் தோற்றம் கட்சி தொண்டர்களிடையே ஏற்படுகிறது. கட்சியில் இருக்கக்கூடிய பொறுப்புகளை பிறகு பிரித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே தலைமை கொண்ட ஒரு பொதுச் செயலாளரை அதிமுக தற்பொழுது தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதற்கான உட்கட்சி போராட்டத்தை நடத்துவதற்கு தயாராக உள்ளோம் ,ஆகையால் இரட்டை தலைமை இல்லாமல் ஒரே தலையுடன் கூடிய ஒரு பொதுச் செயலாளரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்ந்தெடுப்பதற்கான கோரிக்கையை பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்த இருக்கிறோம் கட்சித் தலைமை மறுக்க நேரிட்டால் உட்கட்சி போராட்டத்தை நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.