சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கோகுல இந்திரா கருத்து தெரிவித்ததால் அமைச்சர் ஜெயக்குமார் சண்டையிட்டுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை தீவிரமாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கோகுல இந்திரா கருத்து தெரிவித்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் தெரிவித்த கருத்து, சசிகலாவின் அரசியல் வருகை தொடர்பானது அல்ல என்றார். இந்த சூழ்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சிலரை களையெடுக்கும் முயற்சியில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.