அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வருடத்தை விட தாமதமாக பருவமழை இந்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவும் தென் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.