Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஓவியாவின் ‘காதல்’ பதிவு… ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம்… இவர்தான் காதலரா?…!!!

பிக்பாஸ் ஓவியா ட்வீட்டரில் ‘காதல்’ என பதிவிட்டு அவரது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை ஓவியா களவாணி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் . இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிகளவு பிரபலமடைந்தார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் . பிக் பாஸ் வீட்டில் கலந்துகொண்ட சக போட்டியாளரான ஆரவ் என்பவரை காதலித்தார்.

https://twitter.com/OviyaaSweetz/status/1349628604146040832

ஆனால் ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார் .  இந்த நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் நட்புறவுடன் இருந்ததாக கூறப்பட்டது . இந்நிலையில் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் காதல் என பதிவிட்டு ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் இவர் உங்கள் காதலரா? என்று கேட்டு வருகின்றனர் . இன்னும் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |