நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து வரும் 31ஆம் தேதி போடப்படும் என ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார். ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.