மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் சாப்பிடும் லாலிபாப் மிட்டாய்களில் கலப்படம் உள்ளது சோதனையில் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் குழந்தைகள் சாப்பிடும் லாலிபப் போன்றவைகளை தயாரித்து வருகின்றனர். அதில் டால்கம் பவுடரை கலந்து கலப்படம் செய்தது சோதனையில் தெரியவந்தது. நகரின் மைய பகுதியில் உள்ள தின்பண்டங்களை உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை சோதனை செய்தது. இதில் 9000 கிலோ மிட்டாய்கள் மற்றும் லாலிபப் பை கைப்பற்றியது. இதில் 4500 கிலோ லாலிபாப் மற்றும் 5600 கிலோ மிட்டாய்கள் இருந்தன.
இதுகுறித்து இந்தூர் கூடுதல் கலெக்டர் கூறுகையில்: “சோதனையின்போது ஒரு சாக்கில் வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் காணப்பட்டது. அதனை பரிசோதனை செய்தபோது டால்கம் பவுடர் என்பது தெரியவந்தது. மேலும் அந்த தொழிற்சாலையில் செய்யப்பட்ட லாலிபாப் மற்றும் மிட்டாய்களில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மிட்டாய்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.