பிக்பாஸ் வீட்டில் ரியோ செல்போன் பயன்படுத்துவது போன்ற புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு ஆரி, ரியோ ,சோம் ,ரம்யா, பாலா, கேபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதிப் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் .
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரியோ செல்போன் பயன்படுத்துவது போன்ற புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் அவர் பயன்படுத்தியது செல்போன் அல்ல . அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மைக்கின் பேட்டரி வேலை செய்கிறதா என்பதை காதில் வைத்து கேட்கிறார் என்று கூறப்படுகிறது . சமீபத்தில் இதே போல் சோம் பிக்பாஸ் வீட்டில் செல்போன் பயன்படுத்துவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.