பொள்ளாச்சியில் பாலியல் கொடூர சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தை அதிர வைத்த அடுத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
22 வயதில் 11 திருமணங்கள் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 22 வயதான வாலிபர் கணேஷ் இவருடன் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் பேஸ்புக் மூலம் நெருக்கமாக பழகி உள்ளார்.. அவரை ரகசிய திருமணம் செய்து வில்லிவாக்கத்தில் வாடகை எடுத்து தங்க வைத்துள்ளார். அந்தப் பெண்ணை கணேஷ் மது அருந்திய நிலையில் கை கால்களை கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.
தொடர்ச்சியாக மனைவியை கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்து தப்பிய இளம்பெண் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை செய்ததில் அந்த பெண் மட்டுமில்லாமல் அடுத்தடுத்து பதினொரு பெண்களை காதலித்து திருமணம் செய்து உள்ளது அம்பலமானது.
காதலிக்கும்போது பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை எடுத்து அவற்றை வைத்து தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகவும், காதலிகளை தனது நண்பர்களிடம் உறவு கொள்ளுமாறு மிரட்டியதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆபாச வீடியோக்கள் மற்றும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். கைதான கணேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.