Categories
கல்வி

“ஜூன் 21க்குள் கட்டாய யோகா பயிற்சி “யுஜிசி அதிரடி உத்தரவு ..!!

ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று யுஜிசி பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது .

உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Image result for yoga

வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் என்று அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு  கோரிக்கை விடுத்து யுஜிசி கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து யோகா பயிற்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை அனைத்து கல்லூரி நிர்வாகங்களும் பல்கலைக்கழகங்களும் மேற்கொண்டு வருகின்றன.

Categories

Tech |