அலுவலகத்திற்கு செல்பவர்கள் அவசர அவசரமாக தலையை குளித்துவிட்டு காய வைக்காமல் கூட சென்று விடுவார்கள். இதனால் முடி உதிர்தல் அதிகமாகும். தலை முடியை எப்படி விரைவாக காய வைப்பது என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
பலர் தலைமுடியை மிக வெப்பமூட்டும் கருவிகளை கொண்டு உலர வைக்கிறார்கள். இதிலிருந்து வரும் சூடான காற்று உலரவைக்கிறது. ஆனால் இது நேரத்தை எடுக்கும் விரைவாக முடியை காய வைக்க நினைப்பவர்கள் அடர்த்தியான முடியை கொண்டு இருப்பவர்கள் விரைவாக கருவிகளை கொண்டு தலையை காய வைக்க முடியாது.
வெப்பக்காற்று உங்கள் முடியை உலர்த்துவதுடன் பல ஆபத்தையும் ஏற்படுத்தும். கண்டிஷனரை பயன்படுத்தினால் உங்கள் முடியின் மீது ஒரு அடுக்கு உருவாகிறது. இது முடியை பாதுகாக்கிறது.
கண்டிஷனரை பயன்படுத்திய பிறகு தலை முடியை சீப்பு கொண்டு சீவுவது நல்ல முறையாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது தலை முடி விரைவாக உளறும்.
குளிக்கும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள். உங்கள் தலை முடியை குளிர்ந்த நீரால் கழுவினால் முடி பளபளப்பாக இருக்கும். அதேசமயம் முடி விரைவாக உலரும்.
குளியல் பொருத்தவரை குறைந்த நேரத்தில் குளிப்பது என்பது மிகவும் நல்லது. தலை முடியை காய வைப்பதற்கு சிலர் குளியலறையில் தலையை தொங்க விட்டு உண்டு. ஆனால் அது தவறு ஏனெனில் குளியலறை எப்போதும் ஈரமாக இருக்கும்.
தலை முடியை காய வைப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். உங்கள் தலைமுடிக்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தாமல், விரைவாக நீரை உறிஞ்சும் துண்டை கொண்டு தலையை துடைக்கும் போது, தலையில் முடியில் உள்ள அதிக அளவு நீரை இழுத்து விரைவாக காய வைக்கின்றது.
அதிகப்படியான தண்ணீரை இழக்க நீங்கள் டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தலாம். தலைமுடி ஈரமாக இருக்கும் போது முடி க்ரீம்களைப் பயன்படுத்தினால் முடி விரைவாக உளறுகிறது. இந்த வழிமுறைகளை பயன்படுத்தினால் எளிதாக தலை முடியை உலர்த்த முடியும்.