சீனாவில் ஓட்டுனர் இல்லாத வாகனங்களை இயக்குவதற்கு 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலை அமைந்துள்ளது.
ஹுவேய் நிறுவனம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலையை அந்நிறுவனம் அமைத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேய் நிறுவனம், போக்குவரத்துத் துறையில் கால்பதிபதற்காக முதற்படியாக ஊக்சி நகரில் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு தானாக இயங்கும் பேருந்து சேவையை இயக்கி வைத்துள்ளது.
வேகத்தடைகள், சாலை சந்திப்புகள், நிறுத்தங்கள் ஆகியவற்றில் இந்த பேருந்து சரியாக நின்று மீண்டும் புறப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவில், சாலையோரத்தில் கை காட்டினால் பொருத்தப்பட்ட உணர்வுகள், கேமராக்கள், ரேடார்கள் போன்றவற்றின் மூலம் பேருந்தை வழி நடத்துவதற்கான அறிவித்தல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.