இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 386 ரன்கள் குவித்துள்ளது
12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 12-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – வங்காள தேசம் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர்.
இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வங்கதேச பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியது. இருவரும் அரைசதம் அடித்தனர்.அதன் பிறகு பேர்ஸ்டோ 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 21 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஜாஸ் பட்லரும், ஜேசன் ராயும் ஜோடி சேர்ந்து ஆடினர்.
ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ரன்கள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதன் பின் இந்த ரன் விகிதத்தை குறைய விடாமல் ஜாஸ் பட்லர் தனது அதிரடியை காட்டி 64 ரன்களும், இயான் மோர்கன் 35 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசியில் அதிரடியாக கிறிஸ் வோக்ஸ் 18 ரன்களும், ப்லெங்கெட் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழந்து 386 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் மொகமது சைபுதீன் மற்றும் மெஹைதி ஹசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து வங்கதேச அணி களமிறங்கி விளையாடி வருகிறது.