தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு பற்றி முன்னரே மக்கள் தெரிந்து கொள்வதற்கு இணையத்தள லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14-ம் தேதி முதல் 15 தேதிகளில் மின் தடை குறித்தான முன் அறிவிப்புகள் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அதிகாராப்பூர்வ இணையதளத்தகவலின் படி இடம்பெறவில்லை. மீண்டும் 16-ம் தேதி முதல் மின்தடை குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
எனவே, தமிழகத்தில் இன்றைய தினம் மின் தடை முன் அறிவிப்புகள் இல்லை என்றே தெரிகிறது. திட்டமிடப்பட்ட உங்கள் பகுதிக்கான மின் தடை அறிவிப்புகளை கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். http://www.tnebltd.gov.in:8080/outages/viewshutdown.xhtml