பிரபல சமையல் கலைஞர் ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த பலம்சிங்(48). இவர் பல வருடங்களுக்கு முன்பு லண்டனில் இடம்பெயர்ந்துள்ளார். அதன் பின்பு அங்கு பிரபல சமையல் கலைஞர் ஆக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவரின் சமையல் திறமைக்கு நிறைய மக்கள் ரசிகர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலம்சிங் உயிரிழந்துள்ளார். இதுபற்றி அவரின் மகனான விஜித்ரா(21) கூறியுள்ளதாவது, கடந்த மாதத்தில் என் தந்தைக்கு கொரனோ தொற்று ஏற்பட்டது.
இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதன்பின்பு மருத்துவர்கள் வந்து பரிசோதிக்கும் போது அவரின் இதயம் நின்றுவிட்டது. ஆனாலும் அவர்கள் இதயத்தை உயிர்ப்பித்தனர். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் கடந்த 3 ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். மேலும் என் தந்தை சிறந்த சமையல் கலைஞர் மற்றும் சிறந்த குடும்பத் தலைவராக விளங்கினார் என்று கூறினார். மேலும் சிங்கின் நண்பர் ஜோகேஸ், அவர் சமையல் துறையின் ஜாம்பவான் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.