கூகுள் நிறுவனம் இணையத்தில் அரசியல் ரீதியான தகவல்களை வெளியிட தடை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு உறுதிச் சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அந்த மன்றத்தில் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 5 பேர் உயிர் இழந்து நாடாளுமன்றம் முழுவதும் சூறையாடப்பட்டது.இப்போராட்டத்திற்கு ட்ரம்ப் தான் காரணம் என்று புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் அவரது சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தேர்தல் தொடர்பான தகவல்கள், விளம்பரங்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் பரவியது தான் இப்போராட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆகையால் கூகுள் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜோ பைடன் பதவி ஏற்பு, நாடாளுமன்ற வன்முறை, ட்ரம்ப் பதவிநீக்கம் செய்யும் நடைமுறைகள் போன்ற அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் கூகுளில் வெளியிடுவதற்கு இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.