வன்முறையை தூண்டும் பதிவுகளை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது என்று டுவிட்டரின் தலைமை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ட்ரம்ப் அதனை ஏற்காமல் தன் ஆதரவாளர்களுடன் வெள்ளை மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். இப்போராட்டத்தில் ட்ரம்பின் 5 ஆதரவாளர்களை போலிசார் சுட்டுக் கொன்றதால் ஆத்திரமடைந்த டிரம்ப் தனது ஆதரவாளர்களை தூண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவு வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதால் ட்விட்டர் நிர்வாகம் அப்பதிவினை நீக்கியதுடன், ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தையும் முக்கியது.
ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர் ஜாக் டோர்சே, “பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டே ட்ரம்பின் ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டது. இதில் கொண்டாடுவதற்கும், பெருமைபடுவதற்கும் ஒன்றுமில்லை. எங்களது நிறுவனம் ஆரோக்கியமான விவாதங்களை மட்டுமே வளர்க்க விரும்பு கிறது. வன்முறையை தூண்டும் எந்த ஒரு பதிவையும் ட்விட்டர் நிறுவனத்தால் ஒருபோதும் ஏற்க முடியாது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.