தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி மத்திய அரசுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. தமிகத்தில் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி, மத்திய அரசுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் தடுக்கப் பட்டாலும், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று வாய்ப்புண்டு. அதனால் தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.