Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க நிறுவனத்துக்கு இந்தியா வைத்த ஆப்பு?… அனுமதிக்கு மறுப்பு…!!!

அமெரிக்க மருந்து நிறுவனம் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரிய நிலையில் இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது.

இந்நிலையில் Pfizer அமெரிக்கா மருந்தக நிறுவனம் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு கோவிட் தடுப்பு மருந்தினை இறக்குமதி செய்து வினியோகம் செய்ய இந்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. ஆனால் இந்திய அரசோ, சீரம் நிறுவனம் போல கூடுதல் உள்ளூர் ஆய்வை மேற்கொண்ட பிறகே அனைத்து தடுப்பூசி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |