தலைநகர் டெல்லியில் பறவை காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட கோழி இறைச்சி சந்தைகளை மீண்டும் திறக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
அதனால் தலைநகர் டெல்லியில் பொதுமக்கள் கோழி இறைச்சி கடைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கோழி இறைச்சி சந்தைகளை மீண்டும் திறக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி அளித்துள்ளார். கோடி சந்தையிலிருந்து 104 கோழிகளிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டதில், 100 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இல்லை என்றும் 4 கோழிகள் அறிகுறி தென்பட்டதால், போபால் ஆய்வகத்திற்கு அதன் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.