ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தண்டாயுதபாணி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முதுநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இரவு 7 மணி அளவில் குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .மேலும் மெயின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தது . அதில் ஒரு பீரோவில் வைத்திருந்த 1,38,000 ரூபாயும் மற்றொரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 1/2 பவுன் நகைகளும் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் கொள்ளை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.