நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது.
இதனையடுத்து ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கர்ப்பிணிகள் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குரு அண்ணா தடுப்பூசிக்கு மற்ற தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் 14 நாட்கள் இடைவெளி மிகவும் அவசியம். கொரோனா தடுப்புக்கு முதலில் செலுத்தப்படும் மருந்தை இரண்டாவது முறையும் செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.