அகதி ஒருவரை உள்ளூர் அதிகாரிகள் நாடுகடத்த உத்தரவிட்டதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷிலிருந்து அகதி ஒருவர் துன்புறுத்தலிலிருந்து தப்பி கடந்த 2011-ம் வருடத்தில் பிரான்சிற்கு வந்துள்ளார். மேலும் அவருக்கு மருத்துவ பிரச்சனைகள் இருப்பதால் தற்காலிகமாக Toulous என்ற இடத்தில் வாழிட உரிமம் பெற்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் வருடத்தில் புலம்பெயரும் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபருக்கு ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பதால் பங்களாதேஷில் சிகிச்சை பெற அனுமதித்துள்ளனர். ஆனால் உள்ளூரின் அதிகாரிகள் இந்த நாட்டை விட்டு அவரை வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் இதற்கு மாறாக எதிர்பாராத தீர்ப்புகளை நீதிமன்றங்கம் வழங்கியுள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதத்தில் Toulous நீதிமன்றம் அந்த நபருக்கு தேவையான மருந்துகள் பங்களாதேஷில் இல்லை என்று கூறி அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவிற்கு தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து Bourteox மேல்முறையீட்டு நீதிமன்றம், கடந்த மாதத்தில் அந்த நபர் ஆஸ்துமா பிரச்சினைகளால் ஏற்கனவே அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரை பங்களாதேஷிற்க்கு நாடு கடத்தினால் அங்குள்ள காற்று மாசுபாடு அவரை உயிரிழக்கச் செய்ய நேரிடலாம் என்று கூறி தடைவிதித்துள்ளது.
மேலும் இது முக்கியமான தீர்ப்பாக கருதப்பட்டுள்ளது. ஏனெனில் சுற்றுச்சூழலை காரணமாகக் கூறி ஒருவர் நாடு கடத்த தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எனினும் நீதிமன்றம் அறிவித்தது போல பங்களாதேஷில் மிகவும் மோசமான மாசு நிலை உள்ளது. யேல் மற்றும் கொலம்பியா ஆகிய பல்கலைகழகங்களின் காற்று மாசுபாடு மோசமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள 180 நாடுகளில் 179 ஆவது இடத்தை பங்களாதேஷ் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.