Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சி மாற்றத்தை தர நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா?… ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தர நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை நோக்கி சூளுரைத்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஆவடி அடுத்த கோயம்பேடு பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ஆட்சிமாற்றத்தை தர நாங்கள் ரெடி. நீங்கள் ரெடியா? என மக்களை நோக்கி சூளுரைத்தார். மேலும் நாம் கோவிலுக்கு எதிரில் என்கிறார்கள். கோவில் அருகில் தான் விழா கொண்டாடி வருகிறோம். எடப்பாடியின் பாராட்டு எதுவும் எனக்குத் தேவையில்லை. பாராட்டும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை என விமர்சித்துள்ளார்.

Categories

Tech |