Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை சாக்கடையுடன் ஒப்பிட்டு பேசிய குருமூர்த்தி… பெரும் பரபரப்பு…!!!

சசிகலாவை சாக்கடை உடன் ஒப்பிட்டு குருமூர்த்தி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் வீடு பற்றி எரிகிறது கங்கை தளத்திற்கு நாம் காத்துக் கொண்டிருக்க முடியாது. நாம் சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம் என்று அருண் சௌரி கூறியிருந்தார். அவர் சொன்னது போல் திமுகவை வீழ்த்த சசிகலாவாகஇருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்என்று தோன்றுகிறது என்று சசிகலாவை சாக்கடை உடன் ஒப்பிட்டு குருமூர்த்தி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Categories

Tech |