Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சசிகுமாரின் ‘ராஜவம்சம்’… படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியுள்ள ராஜ வம்சம் படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது ‌.

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் . இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், சுப்ரமணியபுரம் ,சுந்தரபாண்டியன், பிரம்மன், தாரை தப்பட்டை ,வெற்றிவேல் ,கொடிவீரன் போன்ற பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ராஜவம்சம் .

Sasi Kumar's 'Raja Vamsam' will be all about embracing life | Tamil Movie  News - Times of India

புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ள இந்த படத்தில் நிக்கி கல்ராணி ,தம்பி ராமையா, யோகிபாபு ,சதீஸ், ராதாரவி, கும்கி அஸ்வின், சிங்கம்புலி, விஜயகுமார், சாம்ஸ் ஆடம்ஸ் ,மனோபாலா ,நிரோஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குடும்பங்களின் மகிமையை உணர்த்தும் விதத்தில் ராஜ வம்சம் படம் தயாராகியுள்ளது . இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |