Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டத்தை மீறி விற்பனை…. ரோந்து பணியில் போலீஸார்…. 3 பேர் கைது….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜய், வேல்முருகன் ஆகியோர் தலைமையில் சிறுமலை பிரிவு, குட்டத்து ஆவாரம்பட்டி ஆகிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டத்து ஆவாரம்பட்டி சேர்ந்த ஜான் தாஸ், அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்த ராசையா ஆகியோர் மது விற்றுக் கொண்டிருந்தனர்.

அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை என்னும் பகுதியில் ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்ற திருமலை நகரை சேர்ந்த கௌதம் கிஷோர் குமார் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Categories

Tech |