Categories
உலக செய்திகள்

220 மில்லியன் மதிப்புடைய தரவுகள்… தவறுதலாக தூக்கி வீசிய இளைஞர்… அறிவித்துள்ள சன்மானம்…!!

இளைஞர் ஒருவர் தற்போது 220 மில்லியன் மதிப்புடைய பிட்காயின் தரவுகளை சேமித்த hard draiveவை தொலைத்துவிட்டு தேடிவருகிறார்.  

பிரிட்டனை சேர்ந்த James Howells என்ற இளைஞர் சுமார் 220 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பிட்காயின் தரவுகளை தன் hard draive ல் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில் அதனை தவறுதலாக தூக்கி வீசிவிட்டு தற்போது தேடி வருகிறார். அதாவது கடந்த 2009 ஆம் வருடத்தில் பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் நடைமுறையில் தேவை இல்லாததாக இருந்துள்ளது.  அப்போது James சுமார் 7500 பிட்காயின் தரவுகளை தன் கணினியில் சேகரித்து வைத்துள்ளார். ஆனால் இதனை அவர் முழுமையாக மறந்துவிட்டார். எனவே கடந்த 2013 ஆம் வருடத்தில் நியூபோர்ட் வேல்ஸ் பகுதியிலிருக்கும் தன் குடியிருப்புக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் தேவையற்ற பொருட்களை வீசும் போது அந்த hard draive வையும் தூக்கி வீசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பிட்காயின் மதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவதை உணர்ந்த James தன் அறியாமையால் குப்பைத் தொட்டியில் போட்டதை எண்ணி வருத்தம் அடைந்துள்ளார். தற்போது இந்த 7500 பிட்காயின்களின் மொத்த மதிப்பு 220 மில்லியன் பவுண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பை கொட்டும் தளத்தின் நிர்வாகிகளுக்கு James முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். எனினும் hard draiveவை தன்னிடம் ஒப்படைப்பவர்களுக்கு 55 மில்லியன் பவுண்டுகள் வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், என்னிடம் ஒரே மாதிரி இருவேறு தரவுகள் இருந்தது. அதனால் நான் தவறான இந்த சேமிப்பை தூக்கி வீசி விட்டேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |